சவுதி அரேபியா;பீரங்கி குண்டு தாக்குதலில் 2 பேர் பலி


சவுதி அரேபியா;பீரங்கி குண்டு தாக்குதலில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 26 Dec 2021 1:54 AM GMT (Updated: 26 Dec 2021 1:54 AM GMT)

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சி படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

ரியாத், 

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சி படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.இந்த போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தரை வழியாகவும் வான் வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் நகரங்கள் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட படகுகள் மூலம் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு, சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான ஜிசான் நகரை குறிவைத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பீரங்கி குண்டுகளை வீசி எறிந்தனர். இந்த பீரங்கி குண்டுகள் அங்கு தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியில் விழுந்து வெடித்து சிதறின. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் மற்றும் ஏமன் நாட்டவர் ஒருவர் என மொத்தம் 2 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என சவுதி கூட்டுப்படைகள் சூளுரைத்துள்ளது.

Next Story