உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28.96 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்துக் கொண்டே வருகிறது
ஜெனீவா,
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.96 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 289,660,920 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 254,114,840 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 56 ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 89,043 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 1,61,398, உயிரிழப்பு - 8,47,162, குணமடைந்தோர் - 4,15,18,472
இந்தியா - பாதிப்பு - 3,48,87,983, உயிரிழப்பு - 4,81,519, குணமடைந்தோர் -3,42,75,312
பிரேசில் - பாதிப்பு - 2,22,91,507. உயிரிழப்பு - 6,19,139, குணமடைந்தோர் - 2,15,67,845
இங்கிலாந்து- பாதிப்பு - 1,31,00,458, உயிரிழப்பு - 1,48,778, குணமடைந்தோர் - 10,365,262
ரஷ்யா - பாதிப்பு - 1,05,19,733, உயிரிழப்பு - 3,09,707, குணமடைந்தோர் - 94,97,063
Related Tags :
Next Story