உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் அதிவேக எடை குறைப்பு நிபுணர்


உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் அதிவேக எடை குறைப்பு நிபுணர்
x
தினத்தந்தி 2 Jan 2022 8:44 PM GMT (Updated: 2022-01-03T02:14:50+05:30)

உலகில் அதிவேக எடை குறைப்பு நிபுணராக டாக்டர் பிரதேக்ஷா பரத்வாஜ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.புதுடெல்லி,

புதுடெல்லியில் உடல் எடை குறைப்புக்கான மையம் ஒன்றை நடத்தி வருபவர் டாக்டர் பிரதேக்ஷா பரத்வாஜ்.  இவர் உடற்பருமன் மருத்துவம் மற்றும் எடை மேலாண்மை மருத்துவத்தில் அர்ப்பணித்து கொண்டுள்ளார்.

இவர் போர்ப்ஸ் இந்தியாவால், சுகாதார முறையிலான எடை குறைப்புக்கான முக்கிய நபர் என்ற விருதும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் அவர் இடம் பெற்றுள்ளார்.  இவர் நோயாளி ஒருவரின் 1.8 கிலோ எடையை 3 மணிநேரத்தில் குறைத்து உலக சாதனை படைத்திருக்கிறார்.  இந்த விருது பெற்றதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
Next Story