கனடாவில் 5-வது அலை: விரைவில் தடுப்பூசி செலுத்துங்கள் - கனடா பிரதமர்


கனடாவில் 5-வது அலை: விரைவில் தடுப்பூசி செலுத்துங்கள் - கனடா பிரதமர்
x
தினத்தந்தி 6 Jan 2022 4:56 PM GMT (Updated: 2022-01-06T22:26:30+05:30)

கனடாவில் கொரோனா 5-ம் அலை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெறத் தொடங்கியுள்ளது. தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கனடாவில் கொரோனா 5ஆம் அலை பாதிப்புகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கனடா எதிர்கொள்ளும் சுகாதார நெருக்கடி குறித்து  நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர்,

 "தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்களால் மக்களும், சுகாதாரப் பணியாளர்களும் விரக்தியடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Next Story