‘ஒமைக்ரான்’ லேசான பாதிப்பு கொண்டதல்ல - இந்திய வம்சாவளி விஞ்ஞானி எச்சரிக்கை


‘ஒமைக்ரான்’ லேசான பாதிப்பு கொண்டதல்ல - இந்திய வம்சாவளி விஞ்ஞானி எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Jan 2022 6:09 PM GMT (Updated: 2022-01-06T23:39:08+05:30)

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியராக இருப்பவர் ரவீந்திர குப்தா.

லண்டன், 

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியராக இருப்பவர் ரவீந்திர குப்தா. இவர் இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஆவார்.

ஒமைக்ரான், தீவிரத்தன்மை குறைந்தது என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இவர் அது தவறு என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் மென்மையானதாக மாறப்போவதில்லை. அதுபோல், அதன் உருமாறிய ரகமான ஒமைக்ரானும் லேசான பாதிப்பு கொண்டதல்ல. அது நுரையீரல் செல்களை பாதிக்கும்.

இ்ந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இருப்பினும், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story