கடந்த வாரத்தில் உலக அளவில் கொரோனா தொற்று 71% அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பு தகவல்


கடந்த வாரத்தில் உலக அளவில் கொரோனா தொற்று 71% அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பு தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2022 6:28 AM GMT (Updated: 2022-01-07T11:58:02+05:30)

கடந்த வாரத்தில் உலக அளவில் கொரோனா தொற்று 71% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பல பிரிவுகளாக பிரிந்து மனிதனை மிரட்டி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவாகி, பல நாடுகளில் உலவிக்கொண்டிருக்கும் கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ், முதலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்பட்டது. 

ஆனால், அது பரவும் வேகம் அதிகமானாலும், டெல்டாவை விட குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என தகவல் வெளியானது. இருப்பினும் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுபட்டுத்த உலக நாடுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா தொற்று கடந்த வாரத்தில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு 2021 டிசம்பர் 27-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரையிலான உலக அளவிலான கொரோனா தொற்று குறித்த அறிக்கையைவெளியிட்டுள்ளது. 

அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் கொரோனா தொற்று பரவல் 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் கடந்த வாரம் 71 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த வாரத்தில் உலக அளவில் புதிதாக 95 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், ஜனவரி 2-ம் தேதி நிலவரப்படி, உலக அளவில் 28.90 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் அமெரிக்காவில் கடந்த வாரம் கொரோனா தொற்று 100 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் 78 சதவீதமும், ஐரோப்பிய மண்டலத்தில் 65 சதவீதமும், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் 40 சதவீதமும், மேற்கு பிசிபிக் பகுதியில் 38 சதவீதமும், ஆப்பிரிக்காவில் 7 சதவீதமும் கொரோனா அதிகரித்துள்ளது.

Next Story