சிலியில் வலிமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு


சிலியில் வலிமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு
x
தினத்தந்தி 8 Jan 2022 10:52 AM GMT (Updated: 2022-01-08T16:22:07+05:30)

சிலி நாட்டின் கடற்கரையோர பகுதியில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.சான்டியாகோ,

சிலி நாட்டின் சுரங்க நகர் பகுதியான கோபியாப்போவில் இருந்து வடமேற்கே 112 கி.மீ. தொலைவில் கடற்கரையோர பகுதியில் இன்று காலை வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


Next Story