நேபாளத்தில் மாத இறுதி வரை பள்ளிகளை மூட முடிவு


நேபாளத்தில் மாத இறுதி வரை பள்ளிகளை மூட முடிவு
x
தினத்தந்தி 10 Jan 2022 10:24 AM GMT (Updated: 10 Jan 2022 10:56 AM GMT)

நேபாளத்தில் ஜனவரி மாத இறுதி வரை பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது என கல்வி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.



காத்மண்டு,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் சிக்கி தவித்து வருகிறது.  இதனை முன்னிட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரசு அலுவலகங்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், ஸ்டேடியங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கும் மற்றும் உள்ளூர் விமானங்களில் ஏறுவதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது.

இந்த முடிவானது வருகிற 17ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்நாட்டு கொரோனா பேரிடர் மேலாண் மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், கொரோனாவின் தீவிர பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, நேபாளத்தில் ஜனவரி மாத இறுதி வரை பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது என கல்வி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story