கஜகஸ்தானில் இணையதள சேவைகள் முடக்கம்..!

கஜகஸ்தான் நாடு முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
நூர்-சுல்தான்,
எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கார்களுக்கு பெரும்பாலும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் புத்தாண்டையொட்டி, கஜகஸ்தான் அரசு எரிபொருள் மீதான விலையை அண்மையில் உயர்த்தியது. இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அங்கு போராட்டம் வெடித்தது.
இந்த சூழலில் கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியிலும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அல்மாட்டி நகரில் மேயரின் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
தொடர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு ராஜினாமா செய்தது. அரசின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அதிபர் காசிம், துணைப் பிரதமர் அலிகான் ஸ்மைலோவ் தலைமையில் இடைக்கால அரசை அமைக்க உத்தரவிட்டார்.
மேலும் அதிபர் காசிம் வருகிற ஜனவரி 19-ந்தேதி வரை நாடு தழுவிய அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது கஜகஸ்தான் நாடு முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர்-சுல்தானிலும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story