தென்ஆப்பிரிக்கா: மினி பஸ்கள் மோதி விபத்து - 9 பேர் பலி


தென்ஆப்பிரிக்கா: மினி பஸ்கள் மோதி விபத்து - 9 பேர் பலி
x
தினத்தந்தி 10 Jan 2022 9:45 PM GMT (Updated: 2022-01-11T03:15:16+05:30)

தென்ஆப்பிரிக்காவின் கேப் மாகாணத்தில் மினி பஸ்கள் எதிரெதிரே மோதிய விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

கேப்டவுண்,

தென்ஆப்பிரிக்காவின் கேப் மாகாணத்தில் உள்ள கெபெர்ஹா நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த மற்றொரு மினிபஸ் மீது பயங்கரமாக மோதியது. 

இந்த கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு வயது முதல் நான்கு வயது வரை உள்ள இரண்டு குழந்தைகளும் அடங்குவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story