'நான் ஆதிக்கம் செலுத்துவேன்' பாடலுக்கு நடனமாடிய மணப்பெண்: விவாகரத்து செய்த மணமகன்..!


நான் ஆதிக்கம் செலுத்துவேன் பாடலுக்கு நடனமாடிய மணப்பெண்: விவாகரத்து செய்த மணமகன்..!
x
தினத்தந்தி 12 Jan 2022 1:28 AM GMT (Updated: 12 Jan 2022 1:28 AM GMT)

'நான் ஆதிக்கம் செலுத்துவேன்' என்று அர்த்தம் கொண்ட பாடலுக்கு மணப்பெண் நடனமாடியதால் மணமகன் விவாகரத்து செய்துள்ளார்.

பாக்தாத்,

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் திருமண நிகழ்வின் போது மணப்பெண் குறிப்பிட்ட பாடல் ஒன்றுக்கு நடனமாடியதற்காக மணப்பெண்னை திருமணத்தன்றே மணமகன் விவாகரத்து செய்து சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மணப்பெண் ஒருவர் திருமணத்தன்று 'மெசைதரா' என்ற சிரிய பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் முதல் பகுதிக்கு 'நான் ஆதிக்கம் செலுத்துவேன்; என்னுடைய கண்டிப்பான அறிவுறுத்தல்களின்படி நீ ஆளப்படுவாய்; 

என்னுடன் நீ இருக்கும் நாள் வரையிலும் என்னுடைய கட்டளைகளின்படி நடப்பாய். நான் திமிரானவள்' என்று அர்த்தம். இந்தப் பாடலுக்கு மணப்பெண் நடனமாடியதை அடுத்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணப்பெண்ணின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து மணமகன் திருமணத்தன்றே மணப்பெண்னை விவாகரத்து செய்துள்ளார். இது போன்று 2021-ம் ஆண்டில் ஜோர்டானில் மணப்பெண் ஒருவர் மணமகன் தன்னுடைய கைக்களில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை இந்த 'மெசைதரா' பாடலுடன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக மணமகன் விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story