ஜெர்மனியில் கொரோனா புதிய உச்சம்; 81,417 பேருக்கு பாதிப்பு


ஜெர்மனியில் கொரோனா புதிய உச்சம்; 81,417 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 10:30 PM GMT (Updated: 2022-01-14T04:00:47+05:30)

ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் புதிய உச்சம் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


பெர்லின்,ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.  இதேபோன்று, ஒமைக்ரான் பாதிப்புகளும் உயர்ந்து வருகின்றன.  இதுபற்றி தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜெர்மனியில் தினசரி கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் அடைந்து உள்ளது.  இதன்படி, 81,417 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவாகி இருந்த எண்ணிக்கையை விட 17 ஆயிரம் கூடுதல் ஆகும்.  7 நாள் பாதிப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு 427.7 என்ற அளவில் நேற்று (வியாழ கிழமை) உயர்ந்து உள்ளது.  இது ஒரு வாரத்திற்கு முன்பு 285.9 ஆக இருந்தது என தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, தடுப்பூசி போடுவது அதிகரிக்கப்பட வேண்டும் என மத்திய சுகாதார மந்திரி கார்ல் கேட்டு கொண்டார்.
Next Story