அமெரிக்காவில் இலவச கொரோனா பரிசோதனை; வரும் 19ந்தேதி தொடக்கம்


அமெரிக்காவில் இலவச கொரோனா பரிசோதனை; வரும் 19ந்தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 14 Jan 2022 10:13 PM GMT (Updated: 14 Jan 2022 10:58 PM GMT)

அமெரிக்காவில் வரும் 19ந்தேதி முதல் மக்கள் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக வலைதளம் தொடங்கப்பட உள்ளது.



வாஷிங்டன்,


அமெரிக்கா நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன.  இந்த நிலையில், ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த டிசம்பரில் வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் நலனுக்காக 500 மில்லியன் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக அரசால் வலைதளம் தொடங்கப்படும் என உறுதி கூறினார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க மக்கள் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக வரும் 19ந்தேதி முதல் COVIDTests.gov என்ற வலைதளம் தொடங்கப்பட உள்ளது.

இதில் பெயர் மற்றும் முகவரி ஆகிய இரண்டை மட்டுமே குறிப்பிட்டால் போதும்.  இதுபற்றிய ஆர்டரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ஒரு குடியிருப்பு முகவரிக்கு 4 பரிசோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story