அர்ஜென்டினாவில் உச்சம் அடைந்த கொரோனா; 1,39,853 பேருக்கு பாதிப்பு


அர்ஜென்டினாவில் உச்சம் அடைந்த கொரோனா; 1,39,853 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2022 12:33 AM GMT (Updated: 2022-01-15T06:03:51+05:30)

அர்ஜென்டினாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,39,853 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


பியூனோஸ் அயர்ஸ்,அர்ஜென்டினாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,39,853 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கொரோனா பாதித்த நாளில் இருந்து மிக அதிக அளவாக தினசரி பாதிப்பு பதிவாகி உள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கொரோனாவுக்கு 96 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,17,901 ஆக உயர்ந்து உள்ளது.  அர்ஜென்டினாவில் மொத்த பாதிப்பு 69 லட்சம் கடந்து உள்ளது.  ஒமைக்ரான் வகை பரவலால் புதிய கொரோனா அலையை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. 


Next Story