உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கைது என எச்சரித்த அதிபர் - தயாராகும் பட்டியல் + "||" + Philippines eyes ‘unvaccinated list’ amid Duterte’s arrest threat

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கைது என எச்சரித்த அதிபர் - தயாராகும் பட்டியல்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கைது என எச்சரித்த அதிபர் - தயாராகும் பட்டியல்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மனிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் நேற்று 34 ஆயிரத்து 21 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 92 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனாவால் பிலிப்பைன்சில் இதுவரை 52 ஆயிரத்து 736 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், வைரஸ் பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும்,தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தொடர்ந்து கொரோனா  தடுப்பு நெறிமுறைகளை மீறி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் டொடிரிஹோ டுடர்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கான உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் பிலிப்பைன்ஸ் தற்போது இறங்கியுள்ளது. கிராமங்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரிக்க உள்ளனர்.

நாட்டில் மொத்தமுள்ள 42 ஆயிரத்து 46 கிராமங்களிலும் கிராம அலுவலர்கள் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் பட்டியல் தயாராக உள்ளது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டியல் தயாராகும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அதிபர் அறிவித்துள்ளதால் அரசு கைது நடவடிக்கையில் இறங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...!
முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
2. தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
செட்டியார்பட்டி அருகே தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
3. ஒரே நாளில் 21,283 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 21,283 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
4. 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு
சிவகாசி வட்டாரத்தில் இன்று நடைபெற உள்ள சிறப்பு முகாமில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட சுகாதாரத்துறை முடிவு செய்து இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
5. நமது தடுப்பூசி திட்டம் நிறைய உயிர்களை காப்பாற்றியுள்ளது - பிரதமர் மோடி
நமது தடுப்பூசி திட்டம் நிறைய உயிர்களை காப்பாற்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.