உலக செய்திகள்

10 நாட்களில் 3-வது சோதனை: ரெயில் இருந்து ஏவப்பட்ட இரு ஏவுகணைகள் - மிரட்டும் வடகொரியா...! + "||" + North Korea confirms missile test from train amid fresh sanctions

10 நாட்களில் 3-வது சோதனை: ரெயில் இருந்து ஏவப்பட்ட இரு ஏவுகணைகள் - மிரட்டும் வடகொரியா...!

10 நாட்களில் 3-வது சோதனை: ரெயில் இருந்து ஏவப்பட்ட இரு ஏவுகணைகள் - மிரட்டும் வடகொரியா...!
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த ஆண்டில் 3-வது முறையாக ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.
பியோங்யங், 

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா. 

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை கடந்த 5-ம் தேதி வடகொரியா பரிசோதனை செய்தது. அந்த சோதனையை தொடந்து கடந்த 11-ம் தேதி ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி 2-வது பரிசோதனை செய்தது. 

இதையடுத்து, ஏவுகணை சோதனை நடத்தியதற்காக வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடைகள் விதித்தது. வடகொரியாவை சேர்ந்த 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது. 10 நாட்களில் மேற்கொள்ளப்படும் 3-வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். இந்த ஆண்டு இது 3-வது பரிசோதனையாகும். இன்று மொத்தம் 2 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது.

ரெயில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் கடல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளுக்கு பதிலடியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் புதிய தடையால் வடகொரியா கோபம்: கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை
வட கொரியா அண்மையில் மேற்கொண்ட ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
2. ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம்
ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் நேரில் பார்வையிட்டுள்ளார்.
3. வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - ஒரே வாரத்தில் இரண்டாவது சோதனை...!
வடகொரியா கடந்த 5-ம் தேதி ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
4. 'உணவுதான் முக்கியம், அணு ஆயுதங்கள் அல்ல' என கூறிய கிம்... மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா...!
‘உணவுதான் முக்கியம், அணு ஆயுதங்கள் அல்ல’ என வடகொரிய அதிபர் சமீபத்தில் கூறிய நிலையில் அந்நாட்டு மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கியுள்ளது.
5. தந்தை நினைவு தினம் "நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க தடை" வடகொரியா அவலம்
நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.