உலக செய்திகள்

கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை - தாக்கிய சுனாமி...! + "||" + Pacific nation of Tonga issues tsunami warning after undersea volcano erupts.

கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை - தாக்கிய சுனாமி...!

கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை - தாக்கிய சுனாமி...!
கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுலுலஃபா,

பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை அமைந்துள்ளது. அந்த எரிமலையின் பெரும்பகுதி கடலுக்கு அடியில் உள்ளது.

இந்நிலையில், அந்த தீவில் உள்ள எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ளது. இதனால், கடலில் சுனாமி அலை உருவானது.

சுனாமி அலைகள் டோங்கோ தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன. குடியிருப்பு பகுதிக்குள் சுனாமி அலை புகுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 

தற்போது மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்

1. மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
2. சிலியில் வலிமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு
சிலி நாட்டின் கடற்கரையோர பகுதியில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. பூடானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
பூடானில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை.
5. ஈரானின் தெற்கே கடுமையான நிலநடுக்கம்
ஈரானின் தெற்கே கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.