அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு


அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு  சுனாமி எச்சரிக்கை விடுப்பு
x
தினத்தந்தி 15 Jan 2022 4:14 PM GMT (Updated: 15 Jan 2022 4:14 PM GMT)

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலில் உள்ள எரிமலை வெடிக்க துவங்கியதால் சுனாமி எச்சரிக்கை  விடுக்கப்பட்டது. ஹங்கா டோங்கா - ஹங்கா ஹாப்பாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் கடல்நீர் புகுந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகள் முழுமைக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், தென்கிழக்கு அலஸ்கா, தெற்கு அலஸ்கா, அலஸ்கான் தீப கற்ப பகுதி மற்றும் அலுடியன் தீவுகள் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 எனினும், மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடற்கரைக்கு மிக அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே அச்சுறுத்தல் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும்  அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

Next Story