பெய்ஜிங்கில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய சீனா


பெய்ஜிங்கில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய சீனா
x
தினத்தந்தி 16 Jan 2022 12:52 PM GMT (Updated: 2022-01-16T18:22:08+05:30)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

பெய்ஜிங்,

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைடியன் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு நபருக்கு பரிசோதனை செய்ததில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முடிவு எதிர்மறையாக வந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒமைக்ரான் பாதிப்பு பெய்ஜிங்கில் கண்டறியப்பட்டதையடுத்து, சீனா கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. பெய்ஜிங் நகருக்குள் வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டுள்ளது. 

Next Story