அபுதாபியில் டிரோன் தாக்குதல்: 2 இந்தியர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு


அபுதாபியில் டிரோன் தாக்குதல்: 2 இந்தியர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 Jan 2022 11:32 AM GMT (Updated: 2022-01-17T17:02:41+05:30)

அபுதாபியில் எண்ணெய் நிறுவனத்தின் கிடங்கு அருகே நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 3 ஆயில் டேங்கர்கள் வெடித்து தீப்பற்றியது.

அபுதாபி, 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையம் அருகே  டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த டிரோன் தாக்குதலில் அங்குள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கில் 3  எரிபொருள் டேங்குகள் தீப்பற்றி எரிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு  ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது. கடல்வழியாக  அபுதாபி அருகே வந்து டிரோன் விமானங்களை இயக்கி தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல் வெளிவந்துள்ளது. 

Next Story