ஜெர்மனியில் 80 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Jan 2022 6:06 PM GMT (Updated: 17 Jan 2022 6:06 PM GMT)

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெர்லின்,


ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதேபோன்று, ஒமைக்ரான் பாதிப்புகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டில் இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 80 லட்சத்து 25 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 53 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதுவரை அங்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 321 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 9,09,397 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Story