பாகிஸ்தானில் ரசாயன ஆலையில் விஷவாயு தாக்கி சீனர் உயிரிழப்பு; பலர் மயக்கம்


பாகிஸ்தானில் ரசாயன ஆலையில் விஷவாயு தாக்கி சீனர் உயிரிழப்பு; பலர் மயக்கம்
x
தினத்தந்தி 18 Jan 2022 7:22 PM GMT (Updated: 2022-01-19T00:52:05+05:30)

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி சீன நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்து உள்ளார்.லாஹூர்,


பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் நகரில் ரசாயன தொழிற்சாலை ஒன்று உள்ளது.  இதில், தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.  இந்த நிலையில், ஆலையில் இருந்த விஷவாயு தாக்கியதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து உள்ளனர்.

விஷவாயு கசிவால் உயிரிழந்த நபர் சீனாவை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.  அவர் ஜாங் சங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.  ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு பற்றி விசாரணை நடத்தும்படி, முல்தான் நகர துணை ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.  குழுவானது, ஒரு வாரத்தில் ஆலையில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். 


Next Story