பாலியல் வழக்குகளை கையாண்டதில் முன்னாள் போப் ஆண்டவர் மீது தவறு உள்ளது விசாரணை அறிக்கையில் தகவல்


பாலியல் வழக்குகளை கையாண்டதில் முன்னாள் போப் ஆண்டவர் மீது தவறு உள்ளது விசாரணை அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 20 Jan 2022 6:59 PM GMT (Updated: 2022-01-21T00:29:16+05:30)

முன்னாள் போப் ஆண்டவரான 16-ம் பெனடிக்ட் முனிச் பேராயராக இருந்தபோது 4 பாலியல் வழக்குகளை கையாண்டதில் தவறு இழைத்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பெர்லின், 

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக (போப் ஆண்டவர்) கடந்த 2005 முதல் 2013 வரை இருந்தவர் 16-ம் பெனடிக்ட். ஜோசப் ரட்சிங்கர் என்ற இயற்பெயரை கொண்ட இவர், கடந்த 1977 முதல் 1982 வரை ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக இருந்தார்.

இந்த மறைமாவட்டத்தில் கடந்த 1945 முதல் 2019 வரை தேவாலயங்களில் பாதிரியார்களால் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து குழு ஒன்று விசாரித்து வந்தது. இந்த குழுவின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் முன்னாள் போப் ஆண்டவரான 16-ம் பெனடிக்ட் முனிச் பேராயராக இருந்தபோது 4 பாலியல் வழக்குகளை கையாண்டதில் தவறு இழைத்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் 3 வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்கள் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டபோதும், அவர்களை ஆலய பணிகளில் அனுமதித்ததாகவும், திருச்சபை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.

இந்த விசாரணை அறிக்கை ஜெர்மனி கத்தோலிக்கர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story