தமிழர் பிரச்சினையை மோடியிடம் கூறக்கூடாது - இலங்கை எம்.பி.க்களுக்கு மந்திரி வலியுறுத்தல்


தமிழர் பிரச்சினையை மோடியிடம் கூறக்கூடாது - இலங்கை எம்.பி.க்களுக்கு மந்திரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Jan 2022 7:49 PM GMT (Updated: 2022-01-21T01:19:34+05:30)

இந்திய பிரதமரிடம் அல்ல. ஏனெனில் இலங்கை, இறையாண்மை கொண்ட ஒரு தனி நாடு. மாறாக இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதி அல்ல’ என குறிப்பிட்டார்.

கொழும்பு, 

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பரவலை அளிக்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த அரசை வலியுறுத்துமாறும், நீண்டகாலமாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உதவுமாறும் பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழ் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இதை இலங்கை அரசு கண்டித்து உள்ளது. இது குறித்து கேபினட் இணை செய்தி தொடர்பாளரும், மந்திரியுமான உதய கம்மன்பிலா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நமது தமிழ் கட்சிகளுக்கு ஏதாவது பிரச்சினையோ அல்லது கவலையோ இருந்தால், அது குறித்து நமது அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் தெரிவிக்க வேண்டும், இந்திய பிரதமரிடம் அல்ல. ஏனெனில் இலங்கை, இறையாண்மை கொண்ட ஒரு தனி நாடு. மாறாக இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதி அல்ல’ என குறிப்பிட்டார்.

Next Story