எரிமலை வெடிப்பால் பாதித்த டோங்கா: உதவிக்கரம் நீட்டிய நாடுகள்


எரிமலை வெடிப்பால் பாதித்த டோங்கா: உதவிக்கரம் நீட்டிய நாடுகள்
x
தினத்தந்தி 21 Jan 2022 12:11 AM GMT (Updated: 21 Jan 2022 12:11 AM GMT)

நிவாரண பொருட்களை சுமந்துகொண்டு சென்ற நியூசிலாந்து விமானம் அங்கு போய் தரை இறங்கி உள்ளது.

டோங்கோ,

பசிபிக் தீவு நாடான டோங்காவில் கடந்த சனிக்கிழமை எரிமலை வெடிப்பால் சுனாமி ஏற்பட்டு பேரழிவு உண்டானது. 

இந்த இயற்கை பேரழிவினால், அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல பகுதிகள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தன. அங்கு விமான நிலைய ஓடுபாதை சாம்பலால் மூடி இருந்தது. அதை இப்போதுதான் அகற்றி உள்ளனர். 

இந்த நிலையில் அந்த நாட்டுக்கு நிவாரண பொருட்களை சுமந்துகொண்டு சென்ற நியூசிலாந்து விமானம் அங்கு போய் தரை இறங்கி உள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலிய விமானமும் உதவிப்பொருட்களுடன் போய் சேர்ந்து இருக்கிறது.


Next Story