ஜப்பானில் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி


ஜப்பானில் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 22 Jan 2022 12:26 AM GMT (Updated: 2022-01-22T05:56:15+05:30)

ஜப்பானில் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

டோக்கியோ,

ஜப்பானில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை செலுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி தடுப்பூசி பெற தகுதியுடைய 80 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் ஏற்கனவே 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story