கொரோனா, பருவநிலை மாற்றத்தால் உலகம் மோசமாக உள்ளது - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Jan 2022 1:06 AM GMT (Updated: 22 Jan 2022 1:06 AM GMT)

கொரோனா, காலநிலை, மோதல் காரணமாக உலகம் தற்போது மோசமாக உள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

நியூயார்க், 

ஐ.நா. பொதுச்செயலாளராக தனது 2-வது பதவி காலத்தை தொடங்கியுள்ள ஆன்டனியோ குட்டரெஸ், 2022-ம் ஆண்டுக்கான முன்னுரிமைகள் குறித்து ஐ.நா. பொதுச்சபையில் இன்று உரையாற்றுகிறார்.

இதுதொடர்பாக அவர் தனியார் பத்திரிகைக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஐ.நா. சபையின் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லை. என்னால் சமாதானம் செய்ய முடியும். நான் மத்தியஸ்தம் செய்ய முடியும், ஆனால் எனக்கு அதிகாரம் இல்லை. மோதல்களை தடுக்கவும், உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கவும், கொரோனா நெருக்கடி மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை சமாளிக்கும் முயற்சியில் எனது முதல் பதவிக்காலத்தில் என்னுடைய முன்னுரிமைகள் மாறவில்லை.

 கொரோனா தொற்றுநோய், காலநிலைமாற்ற நெருக்கடி மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவற்றால் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது உலகம் பல வழிகளில் மோசமாக உள்ளது” என்று ஆன்டனியோ குட்டரெஸ் கூறினார்.


Next Story