ஆப்கானிஸ்தானில் சாலை விபத்து; அரசு உயரதிகாரி உள்பட 5 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் சாலை விபத்து; அரசு உயரதிகாரி உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 22 Jan 2022 4:03 PM GMT (Updated: 2022-01-22T21:33:52+05:30)

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.


காபூல்,


ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே பாரியாப் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.  இதனால், பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் முடங்கின.  இந்த நிலையில், தவுலத் அபாத் மாவட்டத்தின் ஜங்கால் பகுதியில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.

இந்த விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.  9 பேர் காயமடைந்து உள்ளனர்.  இந்த விபத்தில் பலியானவர்களில், மாகாண தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் ஆணைய தலைவரான ஜாம்ஷித் குர்ஷித் என்பவரும் அடங்குவார்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடந்து வருகிறது.


Next Story