ஹோண்டுராசில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே கைகலப்பு


ஹோண்டுராசில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே கைகலப்பு
x
தினத்தந்தி 22 Jan 2022 8:49 PM GMT (Updated: 22 Jan 2022 8:49 PM GMT)

தாராளவாத கட்சியை சேர்ந்த 20 உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் எதிர்தரப்புக்கு வாக்களித்ததால், கைகலப்பு

டெகுசிகல்பா,

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தாராளவாத கட்சியை சேர்ந்த சியோமாரா கேஸ்ட்ரோ வெற்றி பெற்றார். இவர் அடுத்த வாரம் அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. கூட்டணி கட்சியை சேர்ந்த லூயிஸ் ரெடோன்டோ என்பவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என சியோமாரா அறிவித்திருந்தார். ஆனால் தாராளவாத கட்சியை சேர்ந்த 20 உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் எதிர்தரப்புக்கு வாக்களித்தனர். இதனால் ஜார்ஜ் காலிக்ஸ் என்பவர் நாடாளுமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த லியுஸ் ரொடோன்டோவின் ஆதரவு உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்த சக ஆளும் கட்சி உறுப்பினர்களை சரமாரியாக தாக்கினர். அவர்களும் பதிலுக்கு தாக்கினர்.

இப்படி இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பால் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் சபை காவலர்கள் வந்து கைகலப்பில் ஈடுபட்ட உறுப்பினர்களை விலக்கி நிலைமையை சரி செய்தனர்.


Next Story