இந்தோனேசியா, பிலிப்பைஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Jan 2022 10:30 PM GMT (Updated: 2022-01-23T04:00:55+05:30)

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜகார்த்தா,

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாகவும், பிலிப்பைன்சில் 6.5 புள்ளிகளாகவும் நிலநடுக்கம் பதிவானது.

இதனிடையே அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகள் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இந்த 3 நாடுகளிலும் நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல்கள் இல்லை.


Next Story