இரண்டாம் பனிப்போர் விளிம்பில் உலகமா? ஐ.நா.சபை பதில்


இரண்டாம் பனிப்போர் விளிம்பில் உலகமா? ஐ.நா.சபை பதில்
x
தினத்தந்தி 23 Jan 2022 12:34 AM GMT (Updated: 23 Jan 2022 12:34 AM GMT)

பனிப்போர் என்பது இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்னர் அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே 1991 வரை நீடித்த மோதலும், முறுக்கலும் ஆகும்.

நியூயார்க், 

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், நியூயார்க்கில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், " உலகம் இரண்டாம் பனிப்போரின் விளிம்பில் இருக்கிறதா?" என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், " உலகம் இரண்டாவது பனிப்போரின் விளிம்பில் இல்லை. மாறாக பனிப்போரைவிட மோசமான ஒரு புதிய வடிவத்திலான சூடான மோதலின் விளிம்பில் உலகம் இருக்கிறது" என பதில் அளித்தார்.

இதுபற்றி அவர் தொடர்ந்து கூறுகையில், "நாங்கள் பனிப்போரை விட மோசமான புதிய வடிவத்தைப் பார்க்கிறோம். நான் அதை பனிப்போர் என அழைக்க மாட்டேன். அதை சூடான போர் என்றும் அழைக்க முடியாது. நான் அதை அனேகமாக ஒரு புதிய வகையான வெதுவெதுப்பான மோதல் என்று அழைப்பேன்" எனவும் குறிப்பிட்டார். பனிப்போர் என்பது இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்னர் அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே 1991 வரை நீடித்த மோதலும், முறுக்கலும் ஆகும்.

Next Story