அமெரிக்காவில் ஒரே நாளில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு


அமெரிக்காவில் ஒரே நாளில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2022 2:31 AM GMT (Updated: 23 Jan 2022 2:31 AM GMT)

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.



நியூயார்க்,


உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவும் தப்பவில்லை.  பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு பாதிப்புகளில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.

அந்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,12,314 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,17,28,557 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனாவில் இருந்து 56,766 பேர் குணமடைந்த நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4,43,29,200 ஆக உயர்ந்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 841 பேர் தொற்று பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.

இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,88,623 ஆக உயர்வடைந்து உள்ளது.  அமெரிக்காவில் 2 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரத்து 734 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story