ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: 42 பேர் உயிரிழப்பு


ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: 42 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Jan 2022 9:28 AM GMT (Updated: 24 Jan 2022 9:28 AM GMT)

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் (ஐஇஏ) மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் ஆப்கானிஸ்தானின் 15 மாகாணங்களில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 76 பேர் காயமடைந்துள்ளதாகவும் கடந்த 20 நாட்களில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கூறிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவி வழங்கப்பட்டு வருகிறது. பேரிடர்களை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருவதாக கூறினர். பனிப்பொழிவினால் நெடுஞ்சாலைகளில் மாட்டிக் கொண்டுள்ள நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த வாரத்தில் மேற்கு பத்கிஸ் மாகாணத்தில் 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு 28 பேர் உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் தற்போது உறையவைக்கும் குளிர் மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வேலையின்மை, பசி, பட்டினி மற்றும் வறட்சி ஆகியவற்றை ஏற்படுத்தி மனிதாபிமான நெருக்கடியை கொடுத்து வருகிறது.

Next Story