1.4 லட்சம் மதிப்பிலான பர்னிச்சர்களை ஆன்லைனில் வாங்கி பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்த சுட்டிக் குழந்தை..!


1.4 லட்சம் மதிப்பிலான பர்னிச்சர்களை ஆன்லைனில் வாங்கி பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்த சுட்டிக் குழந்தை..!
x
தினத்தந்தி 24 Jan 2022 3:51 PM GMT (Updated: 24 Jan 2022 3:51 PM GMT)

1.4 லட்சம் மதிப்பிலான பர்னிச்சர்களை ஆன்லைனில் வாங்கி 20 மாத குழந்தை பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

நியூஜெர்சி, 

அமெரிக்காவில் 22 மாத குழந்தை ஆன்லைனில் பர்னிச்சர்கள் ஆர்டர் செய்து தாய் தந்தைக்கு அதிர்ச்சி அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நியூஜெர்சி பகுதியில் வசிக்கும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரமோத் மற்றும் மதுகுமார். இவர்களது இளையமகன் 22 மாத சுட்டிக்குழந்தை ஆயான்ஷ். 

சமீபத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்ததாக கூறி பிரபல நிறுவனத்திலிருந்து விலைமதிப்புள்ள பர்னிச்சர்கள் வந்து இறங்கியுள்ளன. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரமோத் மற்றும் மது தனது மூத்த குழந்தைகளிடம் இதைப் பற்றி கேட்டுள்ளனர். அவர்கள் ஆர்டர் செய்யவில்லை என்றதும் குழம்பிப்போன தம்பதி இறுதியாக அவர்களின் இளையமகன் ஆயான்ஷ் தான் இந்த ஆர்டரை செய்துள்ளான் என்பதை கண்டறிந்த போது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்துள்ளது. 

தனது தாய் ஆன்லைனில் ஆர்டர் செய்வதை கவனித்துக் கொண்டிருந்த ஆயன்ஷ் தானும் அதுபோல் முயற்சி செய்து ஆர்டர் செய்துள்ளான். 2000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய 1.4 லட்சம் ரூபாய்) மதிப்புள்ள பொருட்களை ஆயான்ஷ் ஆர்டர் செய்துள்ளான். தற்போது அவனது பெற்றோர் அவன் ஆர்டர் செய்த பொருட்கள் அனைத்தும் வந்து சேர்ந்த பிறகு மொத்தமாக நிறுவனத்தில் கொடுத்து பணத்தை திரும்பப் பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.  

Next Story