ஹைதியில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 வீடுகள் தரைமட்டம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Jan 2022 5:20 AM GMT (Updated: 2022-01-25T11:44:10+05:30)

ஹைதியில் 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 2 பேர் உயிரிழந்தனர்.

போர்ட்-ஓ-பிரின்ஸ்,

தென்மேற்கு ஹைட்டியில் 5.3 ரிக்டர் அளவில்  கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கமானது தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே 200 கிமீ (124 மைல்) தொலைவில் உள்ள லெஸ் கேய்ஸ் நகரில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து மேலும் 4.4 மற்றும் 5.1 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால். 2 பேர் உயிரிழந்தனர். 200 வீடுகள் தரைமட்டமானது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story