ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் விரிவடைவதை தடுக்க வேண்டும்: ஐ.நா


ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் விரிவடைவதை  தடுக்க வேண்டும்: ஐ.நா
x
தினத்தந்தி 26 Jan 2022 4:37 PM GMT (Updated: 2022-01-26T22:07:39+05:30)

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் விரிவடைவதை தடுக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ கட்டர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெனீவா,

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் விரிவடைவதை நாம் கண்டிப்பாக தடுக்க வேண்டும் ஐக்கிய நாடுகள்  அவையின் பொதுச்செயலாளர் அண்டனியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று அண்டனியோ கட்டர்ஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:   பயங்கரவாத அமைப்புகள் வளருவதற்கு வளமான இடமாக ஆப்கானிஸ்தான் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு சர்வேச நாடுக்ள் உதவாவிட்டால் பிராந்தியமும் உலகமும் மிகப்பெரும் விலையை கொடுக்க நேரிடும்.

 தலீபான்களால் கைப்பற்றப்பட்டு 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும், ஆப்கானிஸ்தான் இன்னும் ஊசல் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆப்கானிஸ்தானியர்களின் தினசரி வாழ்க்கை உறைந்த நகரமாகவே உள்ளது. ஆப்கானிஸ்தானின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதை தலீபான்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்

Next Story