பிரான்சில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா பாதிப்பு...!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Jan 2022 11:25 PM GMT (Updated: 26 Jan 2022 11:25 PM GMT)

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,28,008 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாரீஸ், 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதன்படி பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.77 கோடியை கடந்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,28,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரான்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தற்போது 1,77,30,556 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 258 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1,10,53,749 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 65,47,060 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story