உக்ரைனுக்கு ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை அனுப்பி வைத்த அமெரிக்கா


உக்ரைனுக்கு ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை அனுப்பி வைத்த அமெரிக்கா
x
தினத்தந்தி 26 Jan 2022 11:36 PM GMT (Updated: 26 Jan 2022 11:36 PM GMT)

உக்ரைனுக்கு ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது.

வாஷிங்டன்,

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. ரஷியா

இந்நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு உடனடி 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

அந்த வகையில், 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 300 ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இது உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் 3-வது ராணுவ உதவியாகும். விமானம் மூலம் இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் சிறப்பு ராணுவப்படையினரை எல்லைப்பகுதிக்கு ரஷியா அனுப்பி வைத்துள்ளது. இது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Next Story