உலக செய்திகள்

ஒரே வாரத்தில் 2 கோடி பேருக்கு கொரோனா..! + "||" + Corona for 2 crore people in one week ..!

ஒரே வாரத்தில் 2 கோடி பேருக்கு கொரோனா..!

ஒரே வாரத்தில் 2 கோடி பேருக்கு கொரோனா..!
உலகளவில் ஒரே வாரத்தில் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஜெனீவா, 

உலக சுகாதார அமைப்பு, கடந்த வாரத்துக்கான கொரோனா வைரஸ் பரவல் நிலை தொடர்பான வாராந்திர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. உலகளவில் ஒரே வாரத்தில் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதில் முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:-

* ஜனவரி 17 முதல் 23 வரையிலான ஒரு வார காலத்தில் உலகளவில் புதிதாக வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

* ஒரே வாரத்தில் 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து அதிகபட்ச எண்ணிக்கை, அதாவது புதிய உச்சம் ஆகும். இந்த காலகட்டத்தில் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் இறந்தும் உள்ளனர்.

* அமெரிக்காவில் 42 லட்சத்து 15 ஆயிரத்து 852 பேரும் (24 சதவீதம் உயர்வு), பிரான்சில் 24 லட்சத்து 43 ஆயிரத்து 821 பேரும் (21 சதவீதம் அதிகரிப்பு), இந்தியாவில் 21 லட்சத்து 15 ஆயிரத்து 100 பேரும் (33 சதவீதம் உயர்வு), இத்தாலியில் 12 லட்சத்து 31 ஆயிரத்து 741 பேரும் (கடந்த வாரஅளவேதான்), பிரேசிலில் 8 லட்சத்து 24 ஆயிரத்து 579 பேரும் (73 சதவீதம் உயர்வு) ஒரு வாரத்தில் வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

அமெரிக்காவில் அதிக இறப்பு

* அதிகபட்ச இறப்பு அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அங்கு ஒரு வாரத்தில் 10 ஆயிரத்து 795 பேரும் (17 சதவீதம் சரிவு), ரஷியாவில் 4,792 பேரும் (7 சதவீதம் வீழ்ச்சி), இந்தியாவில் 3,343 பேரும் (47 சதவீதம் உயர்வு), இத்தாலியில் 2,440 பேரும் (24 சதவீதம் அதிகரிப்பு), இங்கிலாந்தில் 1,888 பேரும் (முந்தைய வாரமும் இதே அளவு) இறந்துள்ளனர்.

* டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில், ஒமைக்ரான் வைரஸ் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஒரு நபர் அதிகளவிலான நபருக்கு இந்த வைரசை பரப்புகின்றனர். அந்த வகையில் டெல்டா இடத்தில் ஒமைக்ரான் வந்து கொண்டிருக்கிறது.

* இந்தியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில், ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களிடையே சோதனையின்போது, அறிகுறியற்ற நோய்த்தன்மை அதிக விகிதம் உள்ளது.

* டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் நுரையீரலை விட மேல் சுவாசக்குழாயின் திசுக்களை வேகமாக பாதிக்கிறது. இது இந்த மாறுபாட்டின் பரவலுக்கு உதவும்.

தென் கிழக்கு ஆசியபிராந்தியம்

* தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் தொடர்ந்து 3-வது வாரமாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. புதிதாக 23 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகினர். இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 36 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.

* இந்த பிராந்தியத்தில் 10-ல் 6 நாடுகளில் கொரோனா வாராந்திர பாதிப்பு 20 சதவீதத்துக்கும் அதிகம் ஆகும். பூடான், வங்காளதேசம், இந்தோனேசியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

* மிக அதிகமான பாதிப்பு எண்ணிக்கை இந்தியா, வங்காளதேசம், நேபாளத்தில் பதிவாகி உள்ளது.

* இந்த பிராந்தியத்தில் கொரோனா உயிரிழப்பு 44 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக 3,770 பேர் இறந்துள்ளனர்.

* உயிர்ப்பலி இந்தியாவில் அதிகமாக (3,343, இது 47 சதவீதம் அதிகம்) பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் இன்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சென்னையில் 28 பேர் உள்பட தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 44 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. கர்நாடகத்தில் புதிதாக 181 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் நேற்று 191 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று சற்று குறைந்து 181 ஆக பதிவாகியுள்ளது.
4. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று ஒருநாள் பாதிப்பு 58 ஆக பதிவான நிலையில் இன்று தொற்று பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது.
5. கொரோனாவால் இந்தியாவில் தான் அதிக உயிரிழப்பு; உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக மொத்தம் 47 லட்சத்து 29 ஆயிரத்து 548 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.