உக்ரைனில் போர் பதற்றம்: அமெரிக்க மக்களை வெளியேற்ற தூதரகம் தீவிரம்


உக்ரைனில் போர் பதற்றம்: அமெரிக்க  மக்களை வெளியேற்ற தூதரகம் தீவிரம்
x
தினத்தந்தி 27 Jan 2022 7:47 AM GMT (Updated: 27 Jan 2022 7:47 AM GMT)

உக்ரைனில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள், இப்போதே புறப்பட தயாராக இருந்து கொள்ளுங்கள் என அந்நாட்டு தூதரகம் வலியுறுத்தி உள்ளது.

உக்ரைனில் போர்  பதற்றம்  நிலவி வருவதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயன்று வருகிறது. அந்த வகையில், 

உக்ரைன் எல்லை பகுதியில் ரஷிய ராணுவம் நெருக்கடி கொடுத்து வருவதால் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் இருப்பதால் அமெரிக்க தூதரகம் அந்நாட்டு குடிமக்களை இப்போதே புறப்பட தயாராக இருந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தி உள்ளது.

இந்த வார தொடக்கத்தில், உக்ரைனுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story