இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 96,871 பேருக்கு தொற்று


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Jan 2022 6:19 PM GMT (Updated: 27 Jan 2022 6:19 PM GMT)

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 96,871 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,45,474 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 338 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 040 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 29 லட்சத்து 61 ஆயிரத்து 845 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 31,28,589 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே இங்கிலாந்தில் இதுவரை நடைமுறையில் இருந்த அனைத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துள்ளன. இதன்படி இனிமேல் இங்கிலாந்தில் முக கவசங்கள் அணிய வேண்டிய அவசியமில்லை. கொரோனா தடுப்பு சான்றிதழ்கள் சட்டப்பூர்வமாக தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story