உலக செய்திகள்

பால்வீதியில் பயமுறுத்தும் ‘சுழலும் பொருள்’ கண்டுபிடிப்பு...!! + "||" + Australia scientists find 'spooky' spinning object in Milky Way

பால்வீதியில் பயமுறுத்தும் ‘சுழலும் பொருள்’ கண்டுபிடிப்பு...!!

பால்வீதியில் பயமுறுத்தும் ‘சுழலும் பொருள்’ கண்டுபிடிப்பு...!!
பால்வீதியில் பயமுறுத்தும் ‘சுழலும் பொருள்’ ஒன்றை ஆஸ்திரேலிய மாணவி கண்டுபிடித்துள்ளார்.
கான்பெர்ரா, 

சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய விண்மீன் தொகுதி பால்வீதியாகும். இதை வெறும் கண்களால் பார்க்கிறபோது அதில் உள்ள நட்சத்திரங்களை தனித்தனியாக வேறுபடுத்தி பார்க்க முடியாது என்பதால் இது இரவு வானில் ஒரு வெண்ஒளிர்பட்டை போன்று தோற்றம் அளிக்கும். 1.5 லட்சம் முதல் 2 லட்சம் ஒளியாண்டுகள் வரை விட்டம் கொண்ட ஒரு பட்டைச்சுருள்தான் இந்த பால்வீதி.

இந்த பால்வீதியில் பயமுறுத்துகிற வகையில் சுழலும் ஒரு பொருளை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்து உலகத்துக்கு சொல்லி இருக்கிறார்கள். முதலில் இதைக் கண்டவர் கர்டின் பல்கலைக்கழகத்தின் மாணவி டைரோன் ஓ டோஹெர்டி ஆவார். 

இவர் மேற்கு ஆஸ்திரேலிய புறநகர்ப்பகுதியில் முர்ச்சிகன் வைட்பீல்டு ஆர்ரோ என்று அழைக்கப்படுகிற பகுதியில் இருந்து ஒரு தொலைநோக்கி மற்றும் அவர் உருவாக்கிய புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார். இந்த மாணவி ஐசிஆர்ஏஆர் என்று அழைக்கப்படுகிற சர்வதேச வானொலி வானியல் ஆராச்சிய மையத்தின் அங்கம் ஆவார். 

இதுபற்றி அந்த மாணவி கூறும்போது, ‘‘நாங்கள் உற்றுநோக்கியபோது சில மணி நேரங்களில் அந்த சுழலும் பொருள் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. இது முற்றிலும் எதிர்பாராதது. ஒரு வானியல் நிபுணராக இது ஒருவித பயமாக இருந்தது. ஏனென்றல் வானத்தில் அவ்வாறு செய்யும் எதுவும் தெரியாது’’ என்றும் தெரிவித்தார். 

சர்வதேச வானொலி வானியல் ஆராச்சி மையத்தின் மற்றொரு அங்கமான வானியற்பியல் நிபுணர் டாக்டர் ஜெம்மா ஆண்டர்சன் இதுபற்றி குறிப்பிடுகையில், ‘‘இது மிகவும் வித்தியாசமானது’’ என தெரிவித்தார். 

‘‘பால்வீதியில் உள்ள இந்த சுழலும் பொருள், பூமியில் இருந்து 4 ஆயிரம் ஒளி ஆண்டுகள் (ஒரு ஒளி ஆண்டு என்பது 9.461 டிரில்லியன் கி.மீ.ஆகும்) தொலைவில் உள்ளது, நம்ப முடியாத அளவுக்கு பிரகாசமானது, மிகவும் வலுவான காந்தப்புலத்தை கொண்டுள்ளது’’ என்று சர்வதேச வானொலி வானியல் ஆராச்சிய மையம் கூறுகிறது. இதுபற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது.