‘ஒலிம்பிக்கில் தலையிடக்கூடாது’ - அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை!


‘ஒலிம்பிக்கில் தலையிடக்கூடாது’ - அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை!
x
தினத்தந்தி 27 Jan 2022 8:50 PM GMT (Updated: 2022-01-28T02:20:51+05:30)

சீனாவில் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரும் 4-ந் தேதி தொடங்குகிறது.

பீஜிங்,

தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது சீனாவில் வரும் பிப்ரவரி 4 முதல் 20-ந் தேதி வரை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரொலிக்கும் என்று சீனா கருதுகிறது. ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என்று அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, ‘‘பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும். தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். சீனாவுக்கு எதிராக வட்டம் போடுவதை நிறுத்துங்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

Next Story