உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 -கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 -கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 28 Jan 2022 1:14 AM GMT (Updated: 28 Jan 2022 1:52 AM GMT)

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7.14 கோடியாக உள்ளது.

ஜெனிவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்னமும் மிரட்டி வருகிறது. உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள்  இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்று பாதிப்பின் வீரியம் சற்று தணிந்தாலும் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை. 

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 கோடியாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.65 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28.97 கோடியாக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7.14 கோடியாக உள்ளது. இதில் தீவிர பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 96,059- ஆகும். 
 
கடந்த 24 மணி நேரத்தில் அதிக  பாதிப்பு  பதிவான நாடுகள் விவரம்;

அமெரிக்கா - 4,61,729
பிரான்ஸ்-3,92,168
இந்தியா- 2,48,697(வோர்ல்டோமீட்டர்ஸ் தகவல்)
பிரேசில்-2,28,972
இங்கிலாந்து 96,871


Next Story