70 ஆண்டுகளாக லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் கார் ஓட்டி டிமிக்கி கொடுத்த தாத்தா...!


70 ஆண்டுகளாக லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் கார் ஓட்டி டிமிக்கி கொடுத்த தாத்தா...!
x
தினத்தந்தி 28 Jan 2022 1:00 PM GMT (Updated: 28 Jan 2022 1:00 PM GMT)

லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாமல் ஒரு நபர் 70 ஆண்டுகளுக்கு மேலாக கார் ஓட்டியுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாமில் உள்ள புல்வெல்லில் டெஸ்கோ எக்ஸ்ட்ரா என்ற பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போலீசார், அந்த காரை ஓட்டிவந்த தாத்தாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த தாத்தா தான் 70 ஆண்டுகளாக லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி வருவதாக கூறி போலீசாருக்கு அதிர்ச்சி அளித்தார். 

1938 இல் பிறந்த அந்த நபர் அவரது 12 வயதில் முதல் லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் கார் உள்பட பல்வேறு வாகனம் ஓட்டி வந்துள்ளார். 70 ஆண்டுகளில் தான் ஒருமுறை கூட போக்குவரத்து போலீசாரால் நிறுத்தப்படவில்லை என்று அந்த தாத்தா கூறியுள்ளார். இது போலீசாரை வியப்படைய செய்துள்ளது.

இதுகுறித்து, புல்வெல் போலீசார் அந்த முதியவர் ஒட்டிய காரின் புகைப்படத்தை தங்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு, 1938 ஆம் ஆண்டு பிறந்த அந்த நபர் (காரை ஓட்டிய தாத்தா) தனது 12 வயது முதல் லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்துள்ளார். எப்படியோ அவர் எந்த போலீசாராலும் நிறுத்தப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அந்த நபர் இதுவரை எந்த விபத்தையும் சந்திக்கவில்லை, யாரையும் காயப்படுத்தவில்லை. அந்த நபர் இன்சூரஸ் இல்லாமல் காரை ஓட்டி இதுவரை யார் மீதும் மோதி அவர்களுக்கு பண இழப்பு எதையும் செய்யவில்லை’ என தெரிவித்துள்ளனர்.

Next Story