திகில் அனுபவங்கள் தரும் வித்தியாசமான ரெஸ்டாரண்ட்..!


திகில் அனுபவங்கள் தரும் வித்தியாசமான ரெஸ்டாரண்ட்..!
x
தினத்தந்தி 28 Jan 2022 7:54 PM GMT (Updated: 2022-01-29T01:24:30+05:30)

சவுதி அரேபியாவின் தலைநகரில் திகில் அனுபவங்கள் தரும் ஷேடோஸ் ரெஸ்டாரண்ட் அமைந்துள்ளது.

ரியாத்,

சவுதி அரேபியாவில் திகில் அனுபவங்களை வழங்கக் கூடிய ரெஸ்டாரண்ட் ஒன்று பிரபலமாகியுள்ளது. 

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைந்துள்ள இந்த 'ஷேடோஸ்' (Shadows) ரெஸ்டாரண்ட் வித்தியாசமான திகில் நிறைந்த அனுபவங்களை வழங்குகிறது. இந்த ரெஸ்டாரண்டில் உணவு மேஜை அருகில் மனித எலும்புக்கூடுகள், ஜாம்பிக்கள், இரத்தக் காட்டேரிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.ஷேடோஸ் ரெஸ்டாரண்டில் உணவு பரிமாறும் ஊழியர்கள் கோரமான உடைகளில் பயமுறுத்தும் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். மேலும்  திகில் நிறைந்த அனுபவத்தை நமக்கு குறைவில்லாமல் கொடுப்பதற்காக ஜாம்பி உடைகளில் நடிகர்களும் இருக்கின்றனர்.ரெஸ்டாரண்டைப் பற்றி கேள்விப்பட்டு டின்னருக்கு சென்ற ஒருவர், 'நான் வேடிக்கையான அனுபவத்தை எதிர்பார்த்து இந்த ரெஸ்டாரண்டிற்கு வந்தேன். ஆனால் இந்த ரெஸ்டாரண்டின் சூழல் திகிலான, அதிக பயம் நிறைந்த அனுபவத்தை தந்தது' என்று கூறியுள்ளார். 

Next Story