ரஷியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியது


ரஷியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 29 Jan 2022 12:12 AM GMT (Updated: 2022-01-29T05:42:06+05:30)

ரஷியாவில் ஒரு நாளில் அங்கு 98 ஆயிரத்து 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாஸ்கோ,

கொரோனாவுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை (ஸ்புட்னிக்-வி) உருவாக்கிய நாடு ரஷியா. அங்கும் கொரோனா வைரஸ் ஆட்டம் போடுகிறது.

நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் அங்கு 98 ஆயிரத்து 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அங்கு இதுவரை இல்லாத புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது.

இதுபற்றி ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்கூறும்போது, “இந்த எண்ணிக்கை அதிகமாகவும், ஒரு வேளை மிக அதிகமாகவும் உள்ளது என்பது வெளிப்படையானது. ஏனெனில் நிறைய பேர் பரிசோதனை செய்துகொள்வதில்லை. அவர்களுக்கு அறிகுறியும் இல்லை” என தெரிவித்தார்.

அதே நேரத்தில் பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஷியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story