ஒமைக்ரான் பரவலால் அதிக உயிரிழப்பை சந்திக்கும் அமெரிக்கா!


ஒமைக்ரான் பரவலால் அதிக உயிரிழப்பை சந்திக்கும் அமெரிக்கா!
x
தினத்தந்தி 29 Jan 2022 2:59 AM GMT (Updated: 29 Jan 2022 3:17 AM GMT)

வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் 8,78,000-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

வாஷிங்டன்

கொரோனா வைரசின் மாறுபாடான ஒமைக்ரானானது டெல்டா அலையை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கவலை. தற்போது ஒமைக்ரான் உலகம் முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அமெரிக்காவில் அதன் பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. 

இது டெல்டாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் வேகமாக பரவும் தன்மைக் கொண்டதால் இதனால் பாதிக்கப்படும் மக்கள் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். வரும் வாரங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு மில்லியன் உயிரிழப்பு ஏற்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.  வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் 8,78,000-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பேராசிரியரான ஆண்ட்ரூ நொய்மர் கூறுகையில்:இந்த ஒமிக்ரான் பரவலானது நம்மை ஒரு மில்லியன் இறப்புகளுக்கு மேல் தள்ளும். ஒமிக்ரான் வைரசின் அறிகுறிகள் லேசானவை, மேலும் சில பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த அறிகுறிகளும் காட்டுவதில்லை. ஆனால் வயதானவர்கள், பிற உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்களுக்கு மிகவும் ஆபத்தானது எனக் கூறியுள்ளார்.

Next Story