பாகிஸ்தானில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - ஒருவர் பலி


பாகிஸ்தானில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து -  ஒருவர் பலி
x
தினத்தந்தி 29 Jan 2022 9:41 PM GMT (Updated: 2022-01-30T03:11:50+05:30)

பாகிஸ்தானில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று (சனிக்கிழமை) புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். 

கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் முதல் தளம் இடிந்து விழுந்ததில் தொழிலராளர்கள், கட்டிட ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய இயந்திரங்கள், கிரேன்கள் உள்ளிட்டவை இடிபாடுகளை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. மீட்புக் குழு இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்க போராடி வருகிறது. 

இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தரமற்ற பொருட்களை கொண்டு கட்டியது விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story