வெறித்தனமான காதல்...! ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் குடும்பம் நடத்தும் மச்சக்கார மனிதர் ...!


வெறித்தனமான காதல்...! ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் குடும்பம் நடத்தும் மச்சக்கார மனிதர் ...!
x
தினத்தந்தி 2 Feb 2022 11:34 AM GMT (Updated: 2 Feb 2022 11:34 AM GMT)

தன்னுடைய மனைவிகள் ஒவ்வொருவரை பற்றியும் அவர்களை எப்படி, எங்கே முதல்முதலாக சந்தித்தார் என சோரூட் பெருமை பொங்க சொல்கிறார்..!

பாங்காக்: 

தாய்லாந்தை சேர்ந்தவர்  பெயர் ஓங் டாம் சோரூட். பச்சை குத்தும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 8 மனைவிகள் உள்ளனர். 8 பேரும் ஒரே வீட்டில் எந்தவித சண்டை சச்சரவும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.  காரணம், அத்தனை மனைவிகளையும் சோரூட் தீவிரமாக காதலிக்கிறார்...!

யூடியூப்பில் மட்டும் 30 லட்சத்துக்கும்  அதிகமான பார்வைகளைப் பெற்ற வீடியோ ஒன்றில்  சோரூட்  தனது ஒவ்வொரு மனைவியையும் அறிமுகப்படுத்தி அவர்கள் எப்படி சந்தித்தார்கள் என்பதை விளக்கினார்.

தன்னுடைய மனைவிகள் ஒவ்வொருவரை பற்றியும் சோரூட் பெருமை பொங்க சொல்கிறார்..!  அவர்களை எப்படி, எங்கே முதல்முதலாக சந்தித்தார், எப்படி காதலை சொன்னார், அந்த காதல் எப்படி வெற்றி பெற்றது. ஆனது என்பது குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு பகிர்ந்து உள்ளார்.முதல் மனைவி பெயர் நோங் ஸ்ப்ரைட். நண்பரின் கல்யாணத்தில் இவரை முதன்முதலில் சந்தித்தாராம். அவரை சந்தித்த  உடனேயே தனது காதலை சொல்லி விட்டார்.  கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம்.. அந்த பெண்ணும் ஓகே சொல்லவும், முதல் திருமணம் நல்லபடியாக முடிந்துள்ளது. 

இரண்டாவது மனைவி பெயர் நோங் எல். இவரிடம் காதலை சொல்லவே இல்லையாம். கண்ணாலேயே காதல் பார்வையை வீசினாராம்.. அந்த பார்வையிலேயே அந்த பெண்ணுக்கு காதல் வந்துவிட்டதாம். 

முதல் மனைவியை பற்றி சொல்லவும், அதற்கு அந்த பெண் எந்த மறுப்பும் சொல்லவில்லை.. ஓகே சொல்லவும், 2வது திருமணமும் நல்லபடியாக முடிந்துள்ளது. 

மூன்றாவது மனைவி நாங் நென்னை ஒரு மருத்துவமனையில் சந்தித்துள்ளார். 4, 5, 6வது மனைவிகளை சமூக வலைதளங்கள் மூலமாக தேர்ந்தெடுத்துள்ளார்.. ஒருத்தர் இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. இன்னொருத்தர் பேஸ்புக்கில், இன்னொருத்தர் டிக்டாக்கில்.3 பெண்களை இவைகளில் சந்தித்து, காதலை சொல்லி, முந்தைய திருமணங்களையும் வெளிப்படையாக கூறி, கல்யாணத்தை முடித்துள்ளார்.

இந்த 6 மனைவிகளுடன் சந்தோஷமாக வாழ்க்கையை ஓட்டினார் சோரூட். இதில் யாருடனும் தன்னுடைய நேரத்தை முழுமையாக செலவழிக்க முடியாதபடி தவித்துள்ளார். 

அப்போதுதான், ஒருநாள் தன் அம்மாவுடன் கோயிலுக்கு போகும்போது, நோங் பிலிம் என்ற பெண்ணைச் சந்தித்தார்...பார்த்ததும் காதல்...!  கல்யாணம் செய்து கொள்வோமா மா என்று ஓபனாகவே கேட்டுவிட்டாராம் சோரூட். இவர் அப்படி கேட்கவும் அந்த பெண்ணால் 'சரி சொன்னாராம்.. அதன்படி 7வது மனைவியாக வந்து சேர்ந்தார் நோங் பிலிம்.

இதனிடையே, ஒருநாள் லீவில் பீச்சுக்கு சென்றிருந்தாராம்.. அப்போது நோங் மாய் என்ற பெண்ணை சந்தித்தார். அவர்தான் இப்போது 8வது மனைவியாகி வந்து  உள்ளார்.


8வது மனைவியிடம் காதலை சொன்னபோதும் பெய்ரூட்டின் 4 மனைவிகளும் கூடவே ஒன்றாகவேதான் இருந்தார்களாம்.

இன்று 8 பேருமே ஒரே வீட்டிற்குள்  இருக்கிறார்கள். 8 பேரும் கணவனை பற்றி சொல்லும் ஒரே வார்த்தை "ரொம்பவும் அக்கறையானவர்" என்பதுதான்.

8 பேரிடமும் பிரிவினை இல்லை.8 பேரையும் நன்றாகவே நடத்துகிறார். இதுவரை எங்களுக்குள் சண்டைகள் வந்ததே கிடையாது" என்கிறார்கள். 

8 கல்யாணம் ஆனதில், முதல் மனைவிக்கு ஒரு மகன் இருக்கிறார்.. இரண்டு மனைவிகளுக்கு இப்போதுதான் குழந்தைகள் பிறந்துள்ளது. ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என்று தெரிந்தும், ஏன் நீங்கள் எல்லாம் ஒருவரையே திருமணம் செய்ய நினைத்தீர்கள் என்று இந்த பெண்களை கேட்டால், 'அவரது காதல்தான் காரணம் என்கிறார்கள்.

இப்போது மனைவிகள் ஆளுக்கு ஒரு வேலைக்கு போகிறார்கள். கைநிறைய சம்பாதிக்கிறார்கள். மாலை நேரம் வீட்டுக்கு வந்து ஜாலியாக இருக்கிறார்கள்.

 அதுமட்டுமல்ல, இரவு படுக்கையை எப்படி பகிர்ந்து கொள்வார்கள் என்று கேட்டால், திட்டமிட்டு பகிர்ந்து கொள்வார்களாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் சோரூட்டுடன் படுத்து கொள்வார்களாம்.  ஒரு மனைவி சோரூட்டுடன் படுக்கையை பகிரும்போது, மற்ற 7 மனைவிகளும் வேறு ஒரு ரூமில் படுத்துக்கொள்வார்களாம். 


Next Story